நாராயணனுனையே…..
பல்லவி
நாராயணனுனையே நாளும் துதித்தேன்
பாராமுகமேனோ மாதவனே கேசவனே
அனுபல்லவி
காரார் குழலாள் திருமளைத் தன்மார்பில்
தீராக்காதலுடன் திருமார்பில் வைத்திருக்கும்
சரணம்
ஆராவமுதே அருந்தேனே கருமணியே
பேராயிரமுடைய சாரங்கபாணியே
ஶ்ரீராமச்சந்திரனே திருவரங்கப் பெருமாளே
மாரனைப் பிரமனைப் படைத்த பரந்தாமனே
நீராருங்கடல் நடுவே பாம்பணைமேல் பள்ளிகொண்ட
வீர ராகவனே விமலனே அமலனே
கோர அரக்கர்களைக் கொன்றழித்த மாயோனே
பாரனைத்தும் போற்றும் பரவாசுதேவனே
No comments:
Post a Comment