வெண்ணிலவுப் பிறையணிந்த…
பல்லவி
வெண்ணிலவுப் பிறையணிந்த பெண்ணுருவே பேரழகே
எண்ணிலா வடிவங்கள் கொண்ட உனைத் துதித்தேன்
அனுபல்லவி
அண்ட சராச்சரங்களனைத்தையும் காத்திடும்
கண்மணியே துர்கே கேசவன் சோதரியே
சரணம்
கண்ணில் நீர் வழிய உன்னெதிரில் நின்று
பண்ணிசைத்துப் பாடி உனை நான் வணங்கிட
புண்ணியம் கோடி செய்தேன் புவனேச்வரியே
விண்ணோரும் மண்ணோரும் வியந்தேற்றும் தாயே
பண்டனை வதைத்த ஶ்ரீலலிதாம்பிகையே
சண்ட முண்டாசுரரைக் கொன்றழித்தவளே
அகார உகார மகார மற்றும்
விகார வடிவங்கள் கொண்டவள் நீயே
மகாதேவனின் இடம மர்ந்தவளே
அகால மரண பயம் நீக்கும் தேவியே
மகா காளியே சண்டி பயிரவியே
சிகாமணியே சிந்தாமணிவாசியே
No comments:
Post a Comment