Friday, 13 October 2023

 


 ஶ்ரீ ராமக்ருஷ்ணனின்……


       பல்லவி

ஶ்ரீராமக்ருஷ்ணனின் பத மலர் பணிந்தேன்

பாரோர் பணிந்தேத்தும் பரம தயாளன்

        அனுபல்லவி

ஆராவமுதன் அவனே கேசவன்

தீரா வினைதீர்க்கும் திருவரங்கநாதன்

            சரணம் 

நாரயணனும் கோவிந்தனுமவனே

ஓராயிரம் பெயருடைய மாதவன் மதுசூதனன்

கார்குழலாள் திருமகளை மார்பில் வைத்திருப்பவன்

பேராளன் காஞ்சிவளர் தேவாதிராஜன்

No comments:

Post a Comment