காணக் காண……
பல்லவி
காணக்காணப் பேரின்பமளிக்கும்
கோணல் பிறையணிந்த கற்பகத்தைத் துதித்தேன்
அனுபல்லவி
ஆணழகன் கபாலீசன் மனங்கவரீச்வரி
வேணுவைக்கையிலேந்தும் கேசவன் சோதரி
சரணம்
மாணப் பெரியவளை மகாதேவியை
தூணினையொத்த கதலித் தொடையுடைய
வாணுதலை வடிவழகுடையவளை
நாணம் கலந்த புன்சிரிப்புடனே
No comments:
Post a Comment