துரத்துகின்றன துயரங்கள் மனிதர்களை ...
உயிர்த்துளி வரை சென்று அசைத்து பிரட்டுகிறது... இது தவிர்க்க முடியாத நீண்ட சுவர்கள்...
முருகா என்ற அழைப்பில் மனம் புதுப்பிக்கப்பட்டு துயரமும் சிதறுகிறது உடைக்கப்பட்ட மலையின் கற்களாக... சரணமய்யா...
சந்ததிகளின் சுவாசக்காற்றே சரணமய்யா...!
சரவணபவனை…..
பல்லவி
சரவணபவனை முருகனைத் துதித்தேன்
துரத்தும் துயர்களை தூரச்செய்திடும்
அனுபல்லவி
பரம புருஷன் கேசவன் மருகனை
அரனுமை மைந்தனை ஆறுமுகனை
சரணம்
கரங்களீறாறு உடைய அறுமுகனை
சுரர்களின் தலைவனை தேவசேனாபதியை
கரம் கூப்பிப் பணிந்ததுமே துயரங்களனைத்துமே
விரைந்து சிதறியது உடைந்த மலைக் கற்களாய்
No comments:
Post a Comment