ஶ்ரீ ராமா நீயே…..
பல்லவி
ஶ்ரீ ராமா நீயே எனைக் காக்க வருவாயே
ஆராவமுதே கேசவனே அருந்தேனே
அனுபல்லவி
பாராமுகமேனோ பரவாசுதேவனே
நாராயணன் நீயே என்று நானறிவேனே
சரணம்
பாராளும் வேந்தே அயோத்தி மன்னவனே
யார் சொல்லி நீயென்னை புறக்கணிக்கின்றயோ
ஊர் சொன்ன சொல் கேட்டு அன்னை ஜானகியையே
காரணமின்றிக் கானகம் செல்லப் பணித்தவனே
No comments:
Post a Comment