तनिमाद्वैतवलग्नं तरुणारुणसम्प्रदायतनुलेखम् ।
तटसीमनि कम्पायास्तरुणिमसर्वस्वमाद्यमद्राक्षम् ॥23॥
I have seen the matchless goddess with a thin waist in the banks of river Kampa,
Who is full of youth and is of the reddish colour of the rising Sun.
மூக பஞ்ச சதி ஆர்ய சதகம் (23) பொருள் விளக்கம்
தனிமாத்வைத வலக்னம் தருணாருண ஸம்ப்ரதாய தனுலேகம்|
தடஸீமனி கம்பாயா: தருணிம ஸர்வஸ்வம் ஆத்யம் அத்ராக்ஷம் ||
மிக நுண்ணிய இடையை உடையவளும், இளம் ஸூர்யனை ஒத்த மெல்லிய மேனி கொண்டவளும், இளமை வனப்பின் உருவாகவும் உள்ள ஆதிப் பொருளாக விளங்கும் தேவியை கம்பா நதிக் கரையில் கண்டேன். அபிராமி பட்டரின் 'இடை ஒடியா வண்ணம் பொருந்திய பூண் ஒக்கும் உதர மடிப்புகள்' என்ற வரிகள் நுண்ணிய இடையை நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறது!
சிவகாமேச்வரியை…….
பல்லவி
சிவகாமேச்வரியை காமாக்ஷியை
கம்பாநதிக்கரையில் கண்டு துதித்தேன்
அனுபல்லவி
சிவன் மனங்கவர்ந்த கேசவன் சோதரியை
பவ பயம் போக்கிடும் பரமேச்வரியை
சரணம்
சிவந்த சூர்யனின் வனப்புடையாளை
உவகை தரும் இளம் மெல்லிடையாளை
தவ யோகியர் ஞானியர் அமரர்கள் போற்றும்
புவனேச்வரியை ஆதி சக்தியை
No comments:
Post a Comment