🙏🏽ஸ்ரீ இராமபிரான் அலங்கார பிரியன்🙏🏽
" பார்த்த விழி பார்த்திருக்க " என்றவாறு விளங்கும் சுந்தரராமனின் திருஉருவினை கம்பர் அனுபவித்துக் கூறுவது மட்டுமின்றி, " அலங்காரப் பிரியனாக " உள்ள அத்திருமாலது அழகிற்கு அழகூட்டும் திருமணக் கோலத்தையும் கம்பர் அணுஅணுவாக இரசித்துப் புனைந்துள்ளார்.
அழகு என்பது பெண்மை உரு மட்டுமல்ல. ஆண்மைக்கும் அழகு உரியது. பெண்களை விட ஆண்களே அழகு என்பதற்கு சேவல், மயில், காளை, சிங்கம், போன்றவைகளே உதாரணம். சீதையின் அழகிற்குக் கொஞ்சமும் குறைந்ததல்ல இராமனின் அழகு என்ற கம்பரின் கூற்றிற்கு திருமலை பிரம்மோற்சவம் காட்சிகளே சாட்சி.
" அழி வரு தவத்தினோ டறத்தை யாக்குவான்
ஒழி வருங் கருணையோ ருருவு கொண்டென
எழு தரு வடிவுகொண் டிருண்ட மேகத்தைத்
தழுவிய நிலவெனக் கலவை சாத்தியே "
காப்பாற்றுவர் இன்றி அழிந்து வரும் தருமத்தையும், தவத்தையும் மீண்டும் வளர்த்திடுவதற்கு, கடவுளர்க்கு உரிய ஒரு அருளானது மனித வடிவம் எடுத்தது போல் எழுதுவதற்கும் அரிய (சித்திரத்தில்) வடிவத்தைப் பெற்று கரிய மேகத்தை நிலவு தழுவுவது போல் இராமனது மேனியில் கலவைச் சந்தனம் சார்த்தப்பட்டது என்று கம்பர் இராமனது திருமேனியில் சந்தனம் சார்த்தப்பட்டுள்ளதை வர்ணிக்கிறார்.
வடுவூரழகனை…..
பல்லவி
வடுவூரழகனைக் கோண்டராமனை
இடுக்கண் களைந்திடும் கேசவனைப் பணிந்தேன்
அனுபல்லவி
நடுக்கம் தீர்த்தவனை நரசிம்ம பிரானை
படுத்துறங்கும் பாற்கடல்வாசனைப் பரந்தாமனை
சரணம்
அடுத்து வந்த எனைத் தள்ளலாகாது
தடுத்து வந்தருள சமயமிதுவே
எடுத்த ஜனனம் கணக்கிலடங்காது
மடுத்த எனைக் காக்க வேண்டுமெனத் துதித்து
No comments:
Post a Comment