மயிலின் அகவலில் ஸட்ஜமும் (ஸ)
காளையின் ஹூங்காரத்தில் ரிஷபமும் (ரி)
ஆட்டின் குரலில் காந்தாரமும் (க)
கொக்கினது சப்தத்தில் மத்தியமும் (ம)
குயிலின் குரலில் பஞ்சமமும் (ப)
குதிரையின் கனைப்பில் தைவதமும் (த)
யானையின் பிளிறளில் நிஷாதமும் (நி)
ஆகியவற்றிலிருந்து தோன்றியது தான், “ஸரிகமபதநி!’ என்றார் குப்பண்ணா. சரிதானா என, “வெரிபை’ செய்ய தோதான ஆள் கிடைக்கவில்லை.
***
படித்தேன்!ரசித்தேன்!பாடல் புனைந்தேன்!
சங்கீத ஓசையை ……
பல்லவி
சங்கீத ஓசையை நானறிந்தேன்
பங்கய மலரமர் கலைவாணி அருளிய
அனுபல்லவி
பொங்கரவணை துயிலும் கேசவனும்
கங்கையையேந்தும் சங்கரனும் ரசிக்கும்
சரணம்
மயிலின் அகவலில் சட்ஜமமும்
காளை ஓசையில் ரிஷபத்தின் நாதமும்
ஆட்டின் குரலில் காந்தார ஒலியும்
கொக்கின் கூவலில் மத்தியமமும்
குயிலின் குரலில் பஞ்சமமும்
குதிரையின் கனைப்பில் தைவதமும்
யானையின் பிளிறலில் நிஷாத ஸ்வரமும்
கேட்டு மனம் மகிழ்ந்து அகம் குளிர்ந்து
No comments:
Post a Comment