நாராயணாவென்று…..
பல்லவி
நாராயணாவென்று ஒரு முறை அழைத்தால் போதும்
தீரா வினை தீர்க்க ஓடோடி வருவான்
அனுபல்லவி
ஓராயிரம் நாமம் ஓதவும் வேண்டாம்
பாராயணமெதுவும் பண்ணவும் வேண்டாம்
சரணம்
காரிகை ஒருமுறை கோவிந்தா வென்றும்
கரி ராஜன் ஒருமுறை ஆதிமூலமே என்றும்
கூவியழைத்ததுமே அவர் துயர் துடைத்தான்
தாவி வந்து குறை தீர்ப்பான் கேசவன் அவனை
No comments:
Post a Comment