காணல்உறுகின்றேன்* கல்அருவி முத்து உதிர*
ஓண விழவில் ஒலிஅதிர* பேணி
வருவேங்கடவா!* என்உள்ளம் புகுந்தாய்*
திருவேங்கடம் அதனைச் சென்று
ஓணத்திருநாளிலுனையே…..
பல்லவி
ஓணத் திருநாளிலுனையே திருவேங்கடவா
காண விழைகின்றேன் கேசவனே மாதவனே
அனுபல்லவி
மாணப் பெரியவனே மரகதவண்ணனே
தூணினைப் பிளந்து வந்த ஆணழகன் நீயே
சரணம்
சாணுரன் முஷ்டிகனை மாய்த்த கண்ணனே
வேணுகானம் பொழிகின்ற வேணுகோபாலனே
தாணுமாலயனாகக்காட்சி தருபவனே
பேணுமடியார்கள் உள்ளத்திலுறைபவனே
No comments:
Post a Comment