வடபத்ரகாளியை……
பல்லவி
வடபத்ரகாளியைப் புடமிட்ட பொன்னை
விடமுண்ட கண்டன் நாயகியைத் துதித்தேன்
அனுல்லவி
வடபத்ரசாயி கேசவன் சோதரியை
விடங்கனிடமமர்ந்த அகிலாண்டேச்வரியை
சரணம்
படமெடுத்த பாம்பை உடலிலணிந்திருப்பவளை
கடம்ப வனந்தனிலமர்ந்திருப்பவளை
பிடாரியென்னும் பெயருடையாளை
குடம் குடமாய்ப் பால் சொரிந்தடியர் துதிப்பவளை
துரிதம்
அடலேறு நரர் சுரர் நான்முகனிந்திரன்
கடல் மகள், கலைமகள், கரம் பணிந்தேத்தும்
No comments:
Post a Comment