சித்திரத்தில் கண்ட……
பல்லவி
சித்திரத்தில் கண்ட குருவாயுரப்பனே
இத்தருணத்திலுனைப் பாடும் வரமருள்வாய்
துரிதம்
சித்தர்கள் யோகியர் நரர் சுரரிந்திரன்
வித்தகரனைவரும் வணங்குமுத்தமனே
அனுபல்லவி
பத்து தலைகொண்ட ராவணனை வதைத்த
வித்தகனும் நீயே கேசவனே மாதவனே
சரணம்
கத்தும் கடல் நடுவே பள்ளிகொண்ட திருமாலே
சத்தியமூர்த்தியே திருமெய்யத்துரைவோனே
புத்தம் புது மலர்கள் தூவியுன் மலரடியை
நித்தம் துதித்தேன் நீயருள வேண்டுமென
No comments:
Post a Comment