ஆனந்தம் அமைதி வழங்கும்...அமைதி நிம்மதி வழங்கும்...
நிம்மதி மீண்டும் ஆனந்தம் வழங்கும்...இந்த வட்டத்தின் நாயகியே...
எல்லாம் நீயே... உன்னால் மட்டுமே இந்த சுகானுபவங்கள் ... சரணமம்மா...!
தேவி காமாக்ஷியின்……
பல்லவி
தேவி காமாக்ஷியின் மலர்ப் பதம் பணிந்தேன்
மூவாசைப் பிணி நீக்கும் முன்வினைப் போக்கும்
அனுபல்லவி
ஆவினங்கள் மேய்க்கும் கேசவன் சோதரியின்
தேவரும் மூவரும் பணிந்தேத்துமீச்வரியின்
சரணம்
ஈனப் பிறப்பறுத்து ஞானமெனக்களித்து
ஊனம் களைந்தென் மனஇருள் நீக்கி
ஆனந்தம் அமைதியெனும் வட்டத்தில்
தேனெனத் தித்திக்கும் வாழ்வளிக்கும்
No comments:
Post a Comment