அயனரனரியும் ……
பல்லவி
அயனரனரியும் பணிந்திடும் தேவி
ஜெய ஜெய துர்கே உனையே துதித்தேன்
அனுபல்லவி
துயர் வினையனைத்தையும் களைந்திடுமன்னையே
மயற்வர மதிநலமருள்பவள் நீயே
சரணம்
அயர்வறும் அமரர்கள் வணங்கிடும் தாயே
பயம் நீக்கி தயவளிக்கும் கேசவன் சோதரியே
உயர் சண்டி மாகாளி நீலி பைரவியே
கயல் கண்ணியே ஶ்ரீ லலிதாம்பிகையே
No comments:
Post a Comment