புவனம் போற்றும்…..
பல்லவி
புவனம் போற்றும் கமாக்ஷி தேவியே
உவகையுடனே உன் பதம் பணிந்தேன்
துரிதம்
தவம் செயும் முனிவரும் சுகசனகாதியரும்
அரனயனரியும் அலைமகள் கலைமகள்
நரர் சுரர் நாரதரிந்திரன் மற்றும் அனைவரும் வணங்கி
கரம் பணிந்தேத்தும் அகிலாண்டேச்வரி
அனுபல்லவி
குவலயம் கொண்டாடும் கேசவன் சோதரியே
சிவனிடம் கொண்டவளே சிவகாமேச்வரியே
சரணம்
தவத்திலா தாமரை மலரிலா தாயே
எதில் நீ மலர்ந்தாய் என்னிடமுரைப்பாய்
பக்தியிலா பாரின் சக்தியிலா நீ
எதில் விரிந்தாய் அன்னையே ஏகாம்ரேச்வரியே
அன்பிலா ஆற்றலிலா எதிலுள்ளாய் தாயே
இதயத்திலா இல்லை கோவில் சிலையிலா
உதயத்திலா அல்லது பெண்மையிலா நீ
எதில் நிலைத்தாய் தேவி உலகநாயகியே
உபசாரத்திலா செய்யும் பூசையலா
சுப பலன் தருபவளே நீயுறைத்திடுவாய்
ஆத்ம சமர்ப்பணத்தாலா தூயமனத்தாலா
எதில் நிறைவடைவாய் தயே ஈச்வரியே
எதில் மலர்ந்தாய் என் தாயே
தவத்திலா; தாமரையிலா
எதில் வளர்ந்தாய் என் தாயே
பாரினிலா; பக்தியிலா !
எதில் விரிந்தாய் என் தாயே
அன்பினிலா ; ஆற்றலிலா
எதில் அமர்ந்தாய் என் தாயே
ஹ்ருதயத்திலா அண்டத்திலா !
எதில் உறைந்தாய் என் தாயே
கோவிலிலா ; பெண்மையிலா
எதில் நிலைத்தாய் என் தாயே
அணுவினிலா; அகத்திலா !
எதில் மகிழ்ந்தாய் என் தாயே
பூஜையிலா ; உபசாரத்திலா
எதில் த்ருப்தியானாய் என் தாயே
தூய மனதினிலா; ஆத்ம சமர்பணத்திலா !
No comments:
Post a Comment