. கிருஷ்ண கமலா பத்ராக்ஷம் , சங்க சக்ர கதா தரம்,
பரமாத்மானம் ஸதா த்யாயேத், பீதாம்பரதரம் ஹரிம்.
ஸ்ரீ கிருஷ்ணம் பரமாத்மனம் , கோடி சூரிய சம பிரபம் ,
நித்யம் ஸர்வ கதம் , சாந்தம் வந்தேஹம் ஞான சித்தயே.
மங்களமானவனை….
பல்லவி
மங்களமானவனைக் கேசவனை மாதவனை
அங்கமில் மதனைப் படைத்தவனைத்துதித்தேன்
அனுபல்லவி
சங்கும் சக்கரமும் கதையும் கையிலேந்தும்
பங்கய நாபனைப் பீதாம்பரமணிந்தவனை
சரணம்
எங்கும் நிறைந்திருக்கும் கண்ணனை மதுசூதனனை
ஒரு கோடிக் கதிரவனை மிஞ்சும் தேசுடையவனை
சாந்தம் மிகுந்தவனை ஞானம் தருபவனை
பொங்ரவணை துயிலும் ஶ்ரீமன் நாராயணனை
No comments:
Post a Comment