அபயாம்பாளுந்தன்……
பல்லவி
அபயாம்பாளுந்தன் பதமலர் பணிந்தேன்…( ஶ்ரீ )
அபயமளித்தெனையாண்டருள வேண்டுமென
அனுபல்லவி
சுப பலன்கள் தரும் திரிபுரசுந்தரி
உபேந்திரனெனும் கேசவன் சோதரி
சரணம்
அபயகரமும் வரத கரமும் நீட்டும்
அபயாம்பிகையுனைச் சரணடைவதன்றி
உபாயம் வேறறியேன் சபாபதி நாயகியே
சுபகரி ஶ்ரீகரி ஶ்ரீ லலிதாம்பிகையே
No comments:
Post a Comment