திரிபுரசுந்தரியைக்…..
பல்லவி
திரிபுரசுந்தரியைக் காணொலியில் கண்டு
பரிபூரணியவளின் மலர்ப் பதம் துதி்த்தேன்
அனுபல்லவி
விரிகமல மலரேந்தும் கேசவன் சோதரியை
சரிநிகர் சமானமில்லாத சங்கரியை
சரணம்
மரிப்பதும் பிறப்பதுமில்லாத தேவியை
கரி நிறத்தவளை மேருவிலுறைபவளை
கிரிகுமாரியை உமாமகேச்வரியை
எரி சுடர் நடுவிலுறை அம்பிகை ஶ்ரீலலிதா
No comments:
Post a Comment