அவதாரம்……
பல்லவி
அவதாரம் இப்புவியில் எதற்கெடுத்தேன் அறியேனே
புவனம் உண்டுமிழ்ந்த கேசவனே எடுத்துரைப்பாய்
அனுபல்லவி
நவநீதக் கண்ணனே நான்முகனைப் படைத்தவனே
அவனியில் உனையன்றி வேறு துணை எனக்கில்லை
சரணம்
தவமோ தானமோ நற்கருமங்களெதுவும்
குவலயம்தனில் நான் ஏதும் செய்ததில்லை
கவலை பிணியிடர் எனை வாட்டும் வேளையில்
மனம் வருந்தித்துதித்தேன் எனக்கருள் புரிவாய்
No comments:
Post a Comment