உலகமே…..
பல்லவி
உலகமே பாலமென்றறிவோம் ஶ்ரீராமா
நலமுடனதைக் கடக்க உதவிடுவாய் ராமா
அனுபல்லவி
அலகிலாவிளையாடல் பல புரியும் கேசவனே
உலகிலெதுவுமே நிரந்தரமில்லை
சரணம்
சலனமும் மாயையும் மனதில் தோன்றும்
பலவீனங்களே பலருமறியார்
புலன்களையடக்கி மனதிலுனை நினைக்கும்
பலம் தருவாயென உனையே துதித்தேன்
No comments:
Post a Comment