அன்னவாகனந்தனில்….
பல்லவி
அன்னவாகனந்தனில் வீற்றிருப்பவளை
கன்னலைக் கற்பகவல்லியைத் துதித்தேன்
அனுபல்லவி
பன்னக சயனன் கேசவன் சோதரியை
பன்னக பூஷணன் காபாலி நாயகியை
சரணம்
தன்னிகரில்லாத தனிப்பெருந்தேவியை
என்னுள்ளம் கவர்ந்தவளை எனக்கருள்பவளை
மின்னல் கொடியிடையாளை மென்னகையுடையாளை
மன்னு புகழ் திருமயிலை தலத்துறையுமீச்வரியை
No comments:
Post a Comment