காதலியாகவே…….
பல்லவி
காதலியாகவே எனை நினைத்தேன் கண்ணா
நோதலின்றி நீ எனையாட்கொள்ள வேண்டுமென்று
அனுபல்லவி
ஓதக்கடல் நடுவே அரவணயில் துயிலும்
மாதவனே மதுசூதனனே கேசவனே
சரணம்
ஆதரவு நீயேயென முப்போதுமுனைத்துதித்தேன்
ஏதமிலாதவனே எனையாளும் கோவிந்தா
யாதவ குலத்துதித்த மாயனே கோபாலனே
பூதலம் போற்றும் ஶ்ரீமன் நாராயணனே
No comments:
Post a Comment