அனைத்துமறிந்தவனை……
பல்லவி
அனைத்துமறிந்தவனைப் பாண்டுரங்க விட்டலனை
நினைத்துத் துதித்தேன் நெஞ்சம் குளிர்ந்தேன்
அனுபல்லவி
வினைப்பயன் பவபயம் களைந்திடும் விட்டலனை
எனையாளும் கேசவனை மாயனை மதுசூதனனை
சரணம்
நினைத்த பொருளனைத்தும் கைகூடச்செய்திடும்
வனமாலையணிந்த ஶ்ரீவாசுதேவனை
தினையளவு துதித்தாலும் பனையளவு பயன் தரும்
சுனை நீராய்க் கருணை சுரக்கும் ஶ்ரீஹரியை
No comments:
Post a Comment