தாங்கிக்கொள்ளக்கூடிய அளவு வேதனைகள் மட்டுமே...
கூடவே நீ வருவதால் அதன் அளவின் தன்மை கூட சற்றே குறைந்தே முருகா...
பட்டுக்கொள்ள நான் தயார்...
அப்போது தான் நீ என்னுடனே இருப்பாய் தாயாராக ... சரணமய்யா சண்முகரே ...
துனபம் துயர்….
பல்லவி
துன்பம் துயர் கொடுத்து உனைமறவாதிருக்கச்செய்யும்
சண்முகப் பெருமானே உன் மலரடி பணிந்தேன்
அனுபல்லவி
சென்ன கேசவன் மருகனே முருகனே
உன்னருளாலன்றோ உலகம் உய்கிறது
சரணம்
அன்பன் நீ அருகிருக்கும் காரணத்தாலன்றோ
தெம்புடனே அனைத்தையும் தாங்குகின்றேன் கந்தா
சம்பு கபாலியின் மைந்தனே குருபரனே
வெம்பவக் கடல் கடக்க நீயேயென் துணை
No comments:
Post a Comment