நரசிம்மர்
விஷ்ணு பகவானின் அவதாரமான யோக நரசிம்மரின் இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ளது. நரசிம்மர் நான்கு கைகளுடன் உட்குடியாசனத்தில் அமர்ந்துள்ளார். நரசிம்மருக்கு 4 கைகள் உள்ளன. மேல் வலது கையில் சக்கரம் மற்றும் மேல் இடது கையில் சங்கு உள்ளது. மீதமுள்ள 2 கைகளும் கால்களும் யோகப்பட்டையுடன் உட்குடிகாசனத்தில் உள்ளது. டெரகோட்டா என்று அழைக்கப்படும் சுட்ட மண்ணினால் செய்யப்பட்டது. இடம் ஓடிசா மாநிலம். காலம் 14 முதல் 16 ஆம் நூற்றாண்டுக்கு இடைபட்டது.
யோகநரசிம்மனை…..
பல்லவி
யோகநரசிம்மனை நாளும் துதித்தேன்
சோகம் நீக்கி சுகமருளும் கேசவனை
அனுபல்லவி
சாகச்செய்து இரணியனை வதைத்தவனை
நாகத்தணையானை நாராயணனை
சரணம்
சாகசங்கள் பல செய்த மதுசூதனனை
ஆகம வேத புராணங்கள் போற்றும்
போகசயனனை மேகவண்ணனை
தேகளீசனை உலகளந்த பெருமாளை
No comments:
Post a Comment