Wednesday, 18 October 2023

கல்லால மரத்தின்….


கல்லால மரத்தின் (ஆலமரம்) கீழ் இருந்து, நான்மறை, ஆறுஅங்கம் முதலானவற்றை கற்றுணர்ந்த கேட்டலில் வல்லுநர்கள் ஆகிய சநகர் முதலிய நான்குமுனிவர்கட்கும், வாக்கியலைக் கடந்த நிறைவாயும், வேதங்கட்கு அப்பாற்பட்டதாயும், எல்லாமாயும் அவற்றுள் ஒன்றும் அல்லதுமாயும் உள்ளதன் உண்மையை உள்ளபடி இருந்து காண்பித்து குறிப்பாலுணர்த்திய தட்சிணாமூர்த்தியை இடையறாமல் நினைந்து பிறவிக் கட்டாகிய பகையை வெல்வாம்


 கல்லாலின் புடையமர்ந்து நான்மறை 

ஆறங்க முதற் கற்ற கேள்வி

வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்து

பூரணமாய் மறைக்கு அப்பாலாய் 

எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை

இருந்தபடி இருந்து காட்டி

சொல்லாமற் சொன்னவரை நினையாமல்

நினைந்து பவத்தொடக்கை வெல்வாம்.

                

                                    கல்லால மரத்தின்….      


                                          பல்லவி  

                          கல்லால மரத்தின் கீழமர்ந்து ஓதிய

                          பரமகுரு தக்ஷிணாமூர்த்தியைத்துதித்தேன்    

                                        அனுபல்லவி  

                          பல்லாண்டு பல பெற்ற கேசவன் நேசனை

                          எல்லாமாயல்லதுமாயிருந்த ஈசனை         

                                               சரணம்                 

                           வல்லவர் சுகசனகாதியர் நால்வர்க்கு

                           நல்லபடி கற்ற நான்மறைக்கப்பால்

                           உள்ளதையுள்ளபடி உணரும்படிச்செய்து

                           சொல்லாமற் சொன்னவரை சொல்லுக்கப்பாலுள்ள

                               

                                     

No comments:

Post a Comment