மயிலைக் கற்பகத்தின்…..
பல்லவி
மயிலைக் கற்பகத்தின் மலரடி பணிந்தேன்
மயிலாக வடிவெடுத்து கபாலீசனைத் துதித்த
அனுபல்லவி
ஒயில் மிகு வடிவுடையாள் கேசவன் சோதரி
கயிலை நாதன் மனங்கவரீச்வரி
சரணம்
மயிலையே கயிலையெனும் புகழ் விளங்கும்
மயிலை திருத்தலத்தில் மகிழ்வுடனே அன்னையவள்
சயிலேந்திரன் மகளாயழகுடனெழுந்தருளி
புயங்கனவனுடன் சேரத் தவம் புரிந்த திரு
No comments:
Post a Comment