ஶ்ரீ சாமிநாதனை…..
பல்லவி
ஶ்ரீ சாமிநாதனை எனக்கருள வேண்டினேன்
ஈசன் சிவன் மகனைக் கேசவன் மருகனை
துரிதம்
நந்தி கணங்கள் நான்முகனிந்திரன்
சுகசனகாதியர் நரர் சுரர் வணங்கும்
அனுபல்லவி
ஆசாபாசத் தளைகளைக் களைபவனை
மாசு மருவிலா தேசுடைய குமரனை
சரணம்
நீச அரக்கன் தாரகனை வதைத்தவனை
ஆசையுடன் வள்ளியை மணம் புரிந்தவனை
காசினி போற்றும் தேவசேனாபதியை
வாச மலர் தூவி மலரடி பணிந்து
No comments:
Post a Comment