பேரணிந்து உலகத் தவர்தொழுதேத்தும் பேரருளாளன் எம்பிரானை*
வாரணி முலையாள் மலர்மகளோடு மண்மகளுமுடன் நிற்ப*
சீரணி மாட நாங்கை நன் னடுவுள் செம்பொன்செய் கோயிலினுள்ளே*
காரணி மேகம் நின்றதொப் பானைக் கண்டுகொண் டு உய்ந்தொழிந் தேனே.
ஸ்ரீதிருமங்கையாழ்வார் ♦ பெரிய திருமொழி 4.3.1
இவ்வுலகிலுள்ளார் அனைவரும் திருநாம ஸங்கீர்த்தனம் செய்துகொண்டு அடிபணிந்து துதிக்கப்பெற்ற பேரருளாளப் பெருமாளாய் எமக்கு ஸ்வாமியாய்ம ழைகாலத்தில் உண்டான அழகிய மேகம் நிற்கிறாப் போலுள்ளவனான பெருமானை அழகு பொருந்திய மாடங்களையுடைய திருநாங்கூரில் நட்டநடுவிலே செம்பொன் செய்கோயில் என்னுந் திருப்பதியிலே, பெரிய பிராட்டியும் பூமிப்பிராட்டியும்கூடியிருக்க கண்டு கொண்டு ஸேவித்து உஜ்ஜீவித்துப்போனேன்.
பேர் அருளாளன் என்று பேர் பெற்றவனும் -எமக்கு ஸ்வாமியாய் -கார் காலத்திலேயே நீர் கொண்டு எழுந்த
காள மேகம் தான் இங்கனே ஒரு வடிவு எடுத்து நிற்கிறதோ என்னலாம் படி விளங்குபவனுமான
எம்பெருமான் இரண்டு பக்கலிலும் திரு மகளும் மண் மகளும் உடன் நிற்க இத் திவ்ய தேசத்திலே சேவித்து வாழப் பெற்றேன்
திருநாங்கூர்த் திருத்தலத்தில்……
பல்லவி
திருநாங்கூர்த் திருத்தலத்திலெழுந்தருளிக் காட்சிதரும்
செம்பொன்னரங்கனைக் கண்டு துதித்தேன்
அனுபல்லவி
இருவினைப் பயன்களகன்றிடச்செய்து
மறுபிறவியில்லாத நிலைபெற வேண்டி
சரணம்
பெருமழை சுமந்திருக்கும் கார்கால மேகமென
உருவம் கொண்ட திருமாலைக் கேசவனைப்
இருபுறம் மண்மகளும் திருமகளும் நின்றிருக்க
அருளமுதாய் விளங்கும் பேரருளாளனை
No comments:
Post a Comment