அமுதே... ஆராவமுதே... என் நெஞ்சை கொள்ளை கொண்ட அமுதனே!!
குடத்தை அமுதனுக்கு என்று தனியாக பாசுரங்கள் பாடாத திருமங்கையாழ்வார், எந்த திவ்ய தேசம் சென்று பாடினாலும் இடையிடையே , " அமுதே அமுதே " என்பார்.
இதனை திருக்குடந்தை ஆண்டவன் ஸ்வாமிகள் " ஆராவமுதனை அவ்வப்போது கூப்பிடுவார் " என்று சொல்லி ஆனந்திப்பார் . உபந்யாஸம் செய்யும்போது தொண்டை கமரினால் எப்படி இரண்டு திராக்ஷை போட்டுக் கொண்டால் ரஸம் ஊருமோ , அதுபோல் ஆழ்வாரும் க்ருஷ்ண ரஸம் நெஞ்சில் ஊற வேண்டும் என்றால், உடனே " அமுதே " என்று ஆராவமுதனை அழைப்பது வழக்கம்.
உலகத்துக்கே நாதனாக, முதல்வனாக இருக்கும் பெருமாள் தான் தங்குவதற்கு ஒரு இடம் தேடி அலைந்து நம் குடந்தையில் தங்கி இருக்கிறார் என்று ஆராவமுதனை காட்டுகிறார் ஆழ்வார்.
திருமங்கையாழ்வார் மன்கண்களால் அமுதனை எவ்விதம் பார்க்கிறார் என்றால்...அவரது தேஹம் மரகத வண்ணத்தில் இருக்கிறது அவரது உதடு பவள வண்ணத்தில் உள்ளது அவரது பல் வரிசை முத்து போல் உள்ளது அவரது பீதாம்பரம் தங்க வண்ணத்தில் உள்ளது.
பல வண்ண ரத்தினங்களை கோத்து ஒரு ரத்தின மாலை செய்து சேவை செய்ய அவசியமில்லாமல், ஸ்வயமேவ இப்படி பல வண்ணத்தில் பெருமாள் ரத்தின குவியல் போல ஜொலி ஜொலி இருக்கிறார் என கொஞ்சுகிறார். சுவையான பால் போலுள்ளாரே! என்று கொஞ்சலாமா? இவரை பற்றிப் பாடினால் உடல் இன்பத்துடன் புல்லரிக்கிறதே என்கிறார்.
ஒரு வருடத்திற்கு முன் எடுத்த தேன் போலல்லாமல் , இப்பொழுது பிழிந்த எடுத்த ' பச்சை தேன் ' போல இருக்கிறாரே என தேனுண்ட மயக்கத்தில் இருப்பவனைப்போல் கொஞ்சி மகிழ்கிறார்.
தங்கத்துடன்கொஞ்சம் தாமிரம் கலந்துதான் நகை செய்வர்... ஆனால் என்னப்பன் அமுதனோ பசும் பொன்னைப்போல் துளியும் கலப்படமில்லால் இருக்கிறாரே!! என்கிறார்.
பொதுவாக ஒவ்வொரு தெய்வத்துக்கு அர்ச்சனைக்கென்று உகந்த பூ உண்டு. இவர்கள் அனைவரும் தன் தலை உச்சியில் வைத்துக் கொள்ளும் பூ எது என்று கேட்டால். ....?
அனைத்து தேவர்களும் தன் உச்சியில் வைத்துக் கொள்ளும் பூவாக திருக்குடந்தை அமுதன் இருக்கிறாரே என்று சொல்கிறார் .
அழகான விஷயங்களை பார்த்தால் கிளியே, மானே, குயில் என கொஞ்சம் தோன்றும். ஆனால் இப்படி கொஞ்சம் பாக்கியம் எனக்கு திருக்குடந்தை ஆராவமுதனை பார்த்த பிறகு கிடைத்ததாம் ஆழ்வார்க்கு அவனை, தேனே, கரும்பின் தேனே என்று எவ்வளவு கொஞ்சினாலும் திருப்தி ஏற்படவில்லையாம் ஆழ்வாருக்கு!!!!
ஆராவமுதே அருந்தேனே……
பல்லவி
ஆராவமுதே அருந்தேனே
சாரங்கபாணியே திருக்குடந்தை வளர்
அனுபல்லவி
பேராயிரமுடைய திருமாலே கேசவனே
தீராவினை தீர்க்கும் திருவடி பணிந்தேன்
சரணம்
காரார் குழலாள் கோமளவல்லியை
பேரானந்தமுடன் மார்பினில் தாங்கும்
சீராளனே மானே அழகே குயிலே
பாரோர் பணிந்தேத்தும் பரமபதநாதனே
காரமர் மேனியனே தித்திக்கும் தெள்ளமுதே
ஊரார் கொண்டாடும் வண்ணப் பசும்பொன்னே
தேரேறி நின்றவனே வானவர் சூடும் பூவே
மாரனையீன்றவனே மரகதவண்ணனே
No comments:
Post a Comment