த்வத்ப்ரபுஜீவப்ரியமிச்சஸி சேந்நரஹரிபூஜாம் குரு ஸததம்
ப்ரதிபிம்பாலங்க்ருத த்ருதி குசலோ பிம்பாலங்க்ருதி மாதநுதே ந
சேதோ ப்ருங்க ப்ரமஸி வ்ருதா பவ மருபூமௌ விரஸாயாம்
பஜ பஜ லக்ஷ்மீ நரஸிம்ஹாநகபத ஸரஸிஜ மகரந்தம் நந
ஶ்ரீலக்ஷ்மிநரஸிம்மர்திருவடிகளேசரணம்🙏🙏🙏
त्वत्प्रभुजीवप्रियमिच्छसि चेन्नरहरिपूजां कुरु सततं
प्रतिबिम्बालङ्कृतिधृतिकुशलो बिम्बालङ्कृतिमातनुते ।
चेतोभृङ्ग भ्रमसि वृथा भवमरुभूमौ विरसायां
भज भज लक्ष्मीनरसिंहानघपदसरसिजमकरन्दम् ॥ १ ॥
If you wish to earn the affection of your master then always worship the man-lion (form of the lord). One who is keen on seeing an adorned image (in a mirror), (always) decorates the object (first). O mind-bee! you wander in vain in the worthless desert of mundane existence. Entertain yourself incessantly with the honey from the pure lotus-feet of (lord) Lakshminarasimha.
O! the carpenter bee called the mind! Why do you wastefully move about in the desert called the essenceless "Samsara"? Please taste, with happiness, the honey which is in the lotus feet of Lord Lakshmi Narasimha. The skilful person who decorates and watches the reflection (jiva) would first decorate the main figure (Isvara), is it not? Similarly, if you desire the love of the ‘jiva’, first do not let go of Lord Lakshmi Narasimha. Please worship Him.
மனமாகிய வண்டே !! உனது எஜமானனாகிய ஜீவனுக்குப் பிரியமானதைச் செய்ய விரும்பினால், ஸ்ரீலக்ஷ்மீநரசிம்மபூஜையை விடாது செய். பிரதிபிம்பத்துக்கு அலங்காரம் செய்வதில் ஈடுபடும் திறமைசாலி, முதலில் நிஜ உருவத் தையே அலங்கரிப்பான்.சாரமற்ற சம்சாரமெனும் பாலைவனத்தில் ஏன் வீணாக அலைகிறாய்? சாரமுள்ள செயலைச் செய்; அதாவது, நீ லக்ஷ்மீநரசிம்மரின் மாசற்ற பாதாரவிந்தத் தேனை அடைவதையே என்றும் மேற்கொள்.
ஶ்ரீலக்ஷ்மி நரசிம்மன்…..
பல்லவி
ஶ்ரீலக்ஷ்மி நரசிம்மன் பதகமலமலரிலுள்ள
சாலச்சிறந்த தேன் பருக முயல்வாயே — மனமே
அனுபல்லவி
மாலன் அழகிய மாலோலெனெனும்
சீலமிகு சிங்கமுகன் பூலோகம் போற்றும்
சரணம்
பிம்பத்திற்கலங்காரம் செய்ய முயலாமல்
நம்பி நிஜ உருவினையே அலங்கரிப்பது போலவும்
பாலைவனத்தில் தேனெடுக்க அலையாமல்
சோலை வனமென விளங்கிடும் கேசவன்
No comments:
Post a Comment