அப்பைய தீக்ஷிதர் பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும். அவரது தம்பியின் பேரன் நீலகண்ட தீக்ஷிதர். இவர் மதுரையில் நாயக்க அரசுகள் இருந்த காலத்தில் மந்திரியாக இருந்தவர். அப்பைய தீக்ஷதர் 72 வயது வரை வாழ்ந்தவர், அப்போது நீலகண்ட தீக்ஷிதரது வயது 8. அப்பைய தீக்ஷதருக்கு குழந்தை நீலகண்டன் மிது அலாதி ப்ரியம்.அப்போதெல்லாம் ஸம்ஸ்கிருதம் சிறுவயதிலிருந்தே கற்று தரப்பட்டு, அதிலேயே பேசுவது வழக்கமாயிருந்த காலம்.
தீக்ஷதர் தனது கடைசிக் காலத்தில் குழந்தையிடம் விளையாட்டாக "ஆபதி கிம்கரணீயம்" என்று கேட்டாரம். அதற்கு பதிலாக நீலகண்ட குழந்தை, "ஸ்மரணாயாம் சரண யுகளம் அம்பாயா" என்று சொன்னதாம். "ஆபதி கிம்கரணீயம்" என்றால் "ஆபத்து வந்தால் என்ன செய்ய வெண்டும் " என்று அர்த்தம். இதற்கு குழந்தை சொன்ன பதிலின் பொருள் என்னவென்றால், 'பரதேவதையின் பாதாரவிந்தத்தை நினைக்க வேண்டும்' என்பது. இத்துடன் நின்றதா இந்த சம்பாஷணை என்றால் இல்லை. அடுத்ததாக அப்பையர் "தத் ஸ்மரணம் கிம் குருதே" என்று கேட்கிறார், அதாவது 'அப்படி நினைத்தால் என்ன பலன்'. அதற்கு குழந்தை 'ப்ரும்மாதீன பி இங்கரீ குருதே' அதாவது பராம்பிகையின் பாதாரவிந்தத்தை ஸ்மரணித்தவனுக்கு ப்ரும்மாதி தேவர்கள் சேவகர்கள் ஆகிறார்கள்' என்று பொருள். இவ்வாறாக சிறு குழந்தைப் பருவத்திலேயே அம்பிகையருளால் வாக்விலாஸத்தைப் பெற்றவர் நீலகண்ட தீக்ஷதர்.இவர் ஆனந்தசாகரஸ்தவம் என்று மீனாக்ஷி அம்மன் பேரில் இயற்றியுள்ளாள்.
அம்பிகை பதமலர்……
பல்லவி
அம்பிகை பதமலர் தினம் துதிப்பதன்றி
வெம்பவக் கடல் கடக்க உபாயம் வேறில்லை
அனுபல்லவி
அம்புய நாபன் கேசவன் சோதரி
சம்பு கபாலியின் நாயகி கௌரி
சரணம்
ஆபத்திருளறச் செய்வதெப்படி என
தாபத்துடன் கேட்ட தந்தைக்கு விடையாய்
பாபத்தைப் போக்கிடுமம்பிகையைத் துதிப்பதே
சோபனத்துடனே சொன்னான் மறுமொழி
அப்பைய தீக்ஷிதர் நீலகண்டனெனும்
தனது சிறுவயது பாலகன் தன்னிடம்
வினவிய கேள்வியும் அதற்கவன் தந்த
அழகிய பதிலையும் படிப்பவரறிவார்
No comments:
Post a Comment