தமருகந்த தெவ்வுருவம் அவ்வுருவம் தானே,
தமருகந்த தெப்பேர்மற் றப்பேர் – தமருகந்து
எவ்வண்ணம் சிந்தித் திமையா திருப்பரே,
அவ்வண்ணம் அழியா னாம்.
விரும்போர்…..
பல்லவி
விரும்புவோர் விரும்பும் வண்ணம் காட்சி தருபவனே
திருமாலே கேசவா உன் திருவடி பணிந்தேன்
அனுபல்லவி
திரும்பும் திசை தொறும் இருக்கும் பரம்பொருளே
திருவடியாருள்ளத்தே வீற்றிருக்குமருளாளா
கருணை நிறைந்தவனே பேராயிரமுடையோனே
கருத்திலிருத்தியுனை த்துதிக்குமடியார்கள்
இருதயத்திலவர் நினக்கும் வடிவில் காட்சிதரும்
திருவாழி வெண்சங்கு ஏந்தும் பெருமாளே
No comments:
Post a Comment