ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானே ஸ்துதிமஹோ
ந சாஹ்வானம் த்யானம் ததபி ச ந ஜானே ஸ்துதிகதா:
ந ஜானே முத்ராஸ்தே ததபி ச ந ஜானே விலயனம்
பரம் ஜானே மாதஸ் த்வதனுஸரணம் க்லேச ஹரணம்
பொருள்: தாயே, எனக்கு மந்திரமோ, யந்திரமோ, ஸ்தோத்திரமோ தெரியாது. எனக்கு பிரார்த்தனையோ, தியானமோ தெரியாது. உன்னைப் புகழ்ந்து பேசவும் தெரியாது. உனது முத்திரிகைகளையும் நானறியேன். ஆனால், அம்மையே உன்னை பின்பற்றி வர மட்டும் எனக்குத் தெரியும். அது ஒன்றே எனது எல்லா துக்கங்ளையும் போக்கி விடும்.
न मत्रं नो यन्त्रं तदपि च न जाने स्तुतिमहो
न चाह्वानं ध्यानं तदपि च न जाने स्तुतिकथाः ।
न जाने मुद्रास्ते तदपि च न जाने विलपनं
परं जाने मातस्त्वदनुसरणं क्लेशहरणम् ॥
சந்திரகலையணிந்த……
பல்லவி
சந்திரகலையணிந்த திரிபுரசுந்தரியே
வந்தனம் புரிந்து உன் பங்கயபதம் பணிந்தேன்
அனுபல்லவி
உந்திகமலன் கேசவன் சோதரியே
நந்தி வாகனன் நாயகியே உமையே
சரணம்
மந்திரம் தந்திரம் ஏதும் நானறியேன்
யந்திர பூசைகள் ஒன்றுமறிந்திலேன்
தோத்திரம் பிரார்த்தனைகள் முத்திரைகளறியேன்
சந்ததமுன் பதம் பணிவதன்றி வேறறியேன்
No comments:
Post a Comment