பாணேன புஷ்பதனுஷ: பரிகல்ப்யமான-
த்ராணேன பக்தமனஸாம் கருணாகரேண |
கோணேன கோமலத்ருஶஸ்தவ காமகோடி
ஶோணேன ஶோஷய ஶிவே மம ஶோகஸிந்தும் ||94||
बाणेन पुष्पधनुषः परिकल्प्यमान-
त्राणेन भक्तमनसां करुणाकरेण ।
कोणेन कोमलदृशस्तव कामकोटि
शोणेन शोषय शिवे मम शोकसिन्धुम् ॥94॥
ஹே! காமகோடீ! மங்களத்தைச் செய்பவளே! மன்மதனது பாணமாயும், பக்தர்களின் உள்ளங்களுக்கு ரக்ஷண நம்பிக்கை செய்வதும் , கருணை நிறைந்ததும், சிவந்ததாயும் இருக்கும் உனது ம்ருதுவான கடாக்ஷத்தினால் எனது சோகமாகிற ஸமுத்ரத்தை வற்றிடும்படியாகச் செய்க!
அருள் வேண்டி…..
பல்லவி
அருள் வேண்டித்துதித்தேன் அன்னை காமாக்ஷியே
பெருமைக்குரிய காஞ்சியிலுறைபவளே
அனுபல்லவி
கருநிறவண்ணன் கேசவன் சோதரி
வருமிடர் விலகிட இரு வினைப் பயன் நீங்க
சரணம்
கருவிழியிரண்டும் காமானின் பாணமாய்
இருப்பினும் தாயே காமகோடி நீயே உன்
கருணை நிறைந்த சிவந்த கடைவிழியால்
அருள் தந்தென் சோகக்கடலை போகிடுவாய்
No comments:
Post a Comment