காய்சினப் பறவையூர்ந்து பொன்மலையின் மீமிசைக் கார்முகில்போல
மாசினமாலி மாலிமானென்று அங்கு அவர்படக் கனன்று முன்னின்றகாய்சினவேந்தே! கதிர்முடியானே! கலிவயல் திருப்புளிங்குடியாய்
காய்சின ஆழி சங்கு வாள் வில் தண்டேந்தி எம்மிடர் கடிவானே
-நம்மாழ்வார் திருவாய்மொழி 9-2-6
காய்சினப் பறவை மீதேறி….
பல்லவி
காய்சினப் பறவை மீதேறி பவனி வரும்
காய்சின வேந்தனை மனமாரத்துதித்தேன்
அனுபல்லவி
ஆய்ப்பாடிக்கண்ணனாய்க் கேசவனாய் மாதவனாய்
வேய்ங்குழலூதித் திரிந்த கோவிந்தனை
சரணம்
காய்கின்ற சினம் கொண்ட பஞ்சாயுதமேந்தி
தீய அரக்கர்கள் மாலி சுமாலியைக் கொன்ற
மாயனை மன்னுபுகழ் திருப்புளியங்குடியில்
தாயாரிருவருடனமர்ந்திருப்பவனை
No comments:
Post a Comment