பெரிய திருமொழி(43).....!!!
உலவு திரையும் குல வரையும் ஊழி முதலா எண் திக்கும்*
நிலவும் சுடரும் இருளும் ஆய் நின்றான் வென்றி விறல் ஆழி வலவன்*
வானோர் தம் பெருமான் மருவா அரக்கர்க்கு எஞ்ஞான்றும்*
சலவன் சலம் சூழ்ந்து அழகு ஆய சாளக்கிராமம் அடை நெஞ்சே!
பெரிய திருமொழி - 1.5.3
கடல் அலைகள், மலைகள், காலம், எட்டுத் திசைகள், சந்திரன், சூரியன் மற்றும் இருட்டு ஆகியவற்றிற்கு அந்தர்யாமியாக இருப்பவனும், திருக்கையில் சக்கரத்தாழ்வானை ஏந்தியவனும், தேவாதி தேவனும், தன்னைச் சரணடையாத அசுரர்களுக்குப் பகைவனும் ஆகிய எம்பெருமான் எழுந்தருளி இருக்கும் இடமானது ஜலத்தால் சூழப்பட்டு அழகுடன் காட்சி அளிக்கும் சாளக்ராம திவ்யதேசத்தை மனமே நீ சென்றடைவாயாக என்று சொல்லும்படி அமைந்த பாசுரமாகும்.
நீர்சூழ்ந்த ……
பல்லவி
நீர் சூழ்ந்த சாளக்கிராம வடிவான
பாற்கடல் வாசனைக் கேசவனைப் பணி மனமே
அனுபல்லவி
ஆர்த்தெழுந்த கடலலையாய் மலை காலமாகி
சூரிய சந்திரராய் எண்திசையுமாகி
சரணம்
கார் வண்ணனான தேவாதி தேவனை
நேர் நின்று பணியா அரக்கரின் காலனாகி
திருவாழியும் சங்கும் கரங்களிலேந்திய
பார் புகழும் திருமாலைப் பரமபத நாதனை
No comments:
Post a Comment