சரணடைந்தோர் நலன்……
பல்லவி
சரணடைந்தோர் நலன் காக்குமச்சுதனை
பரந்தாமனைக் கேசவனைப் பணிந்தேன்
துரிதம்
அரனயனிந்திரன் நரர் சுரர் நாரதர்
கரம் பணிந்தேத்தும் பரமனைத் திருமாலை
அனுபல்லவி
மரணம் பிறப்பென்னும் மாயச்சுழலகல
வரந்தரும் மாலவனை மாயக் கண்ணனை
சரணம்
நிரந்தரமில்லா உலகில் நிலைத்திருப்பவனை
கரன் முரனரக்கரை வதைத்த மாதவனை
கரங்களில் சங்கும் சக்கரமுமேந்தி நிற்கும்
பரமபுருஷனை ஶ்ரீமன் நாராயணனை
No comments:
Post a Comment