அரவிந்த மலர் நாபன்……
பல்லவி
அரவிந்த மலர் நாபன் கேசவன் சோதரி
சங்கரி உந்தன் பங்கய பதம் பணிந்தேன்
துரிதம்
அரனயனரி பணி அகிலாண்டேச்வரி
அனுபல்லவி
சரணடைந்தோரை காத்தருள்பவளே
பரந்தாமன் மார்பிலுறைபவளே
சரணம்
வரம் தரும் கரமும் அபய கரமும் நீட்டும்
பரமேச்வரியே பர்வதகுமாரியே
அரக்கன் மகிடனின் சிரம் கொய்தவளே
பரமேச்வரனின் பங்கிலுறைபவளே
துரிதம்
நரர் சுரர் நாரதர் சுகசனகாதியர்
சுரபதி அனைவரும் கரம் பணிந்தேத்தும்
No comments:
Post a Comment