அரங்க நாயகி……
பல்லவி
அரங்க நாயகி ஶ்ரீ பார்கவி
வரம் தருவாயென மலரடி பணிந்தேன்
துரிதம்
அரனயனமரர்கள் அமரேந்திரனும்
நரர் சுரர் நாரதர் கரம் பணிந்தேத்தும்
அனுபல்லவி
அரங்கநாயகன் கேசவன் மனம் மகிழ
பரந்தாமனவன் மார்பிலுறைபவளே
சரணம்
கரங்களும் கண்களும் அழகிய திருமுகமும்
சரணங்களனைத்துமே அரவிந்தமெனத் திகழும்
சிறப்புடன் விளங்கிடும் கடலரசன் மகளே
கருவண்டைப் பழிக்கும் கருங்குழலாளே
No comments:
Post a Comment