சரணம் சரணம்….
சரணம் சரணம்……
பல்லவி
சரணம் சரணம் கோவிந்தா சரணம்
மரணம் பிறப்பெனும் மாயச்சுழலகல
அனுபல்லவி
பரம்பொருள் நீயே மாயனே கேசவா
அறம் பொருளின்பமனைத்துமளிப்பவனே
துரிதம்
நரர் சுரர் நாரதர் சுகசனகாதியர்
சுரபதி அனைவரும் கரம் பணிந்தேத்தும்
சரணம்
கரன் முரனரக்கரின் சிரம் கொய்தவனே
புரமெரித்த பரமனும் பிரமனும் பணிந்திடும்
பரசுராமனே பாற்கடல் வாசனே
கரம் கூப்பி சிரம் தாழ்த்தி உனையே துதித்தேன்
No comments:
Post a Comment