திருநாவுக்கரசர் தேவாரம்
வெள்ளநீர்ச் சடையனார் தாம்
வினவுவார் போல வந்தென்
உள்ளமே புகுந்து நின்றார்க்கு
உறங்கு நான் புடைகள் போந்து
கள்ளரோ புகுந்தீர் என்னக்
கலந்துதான் நோக்கி நக்கு
வெள்ளரோம் என்று நின்றார்
விளங்கிளம் பிறையனாரே.
வெள்ளைப் பிறையணிந்த…..
பல்லவி
வெள்ளைப் பிறைநிலவை சிரசில் சூடியவன்
பிள்ளைக்கறி கேட்ட பெருமைக்குரியவன்
அனுபல்லவி
பள்ளிகொண்ட பெருமாள் கேசவன் நேசன்
அள்ளக் குறையாத கருணை மழை பொழிபவன்
சரணம்
வெள்ளநீர் சடையில் அணிந்த ஓரழகனெந்தன்
உள்ளம் தனில் நான் உறங்கும் போது வந்தான்
கள்ளனோ என்றவனை கேட்டதும் நகைத்து நின்றான்
வெள்ளை நீறணிந்த நானோ கள்வனோ என்று கேட்டான்
No comments:
Post a Comment