மையார்கருங்கண்ணி* கமல மலர்மேல்*
செய்யாள் திருமார்வினில்சேர்* திருமாலே*
வெய்யார்சுடர்ஆழி* சுரிசங்கம்ஏந்தும்*
கையா உன்னைக்காணக்* கருதும் என்கண்ணே
ஶ்ரீபார்த்தசாரதிபெருமாள்திருவடிகளேசரணம்
நம்மாழ்வார்திருவடிகளேசரணம்.
திருவாழி புரிசங்கு……
பல்லவி
திருவாழி புரிசங்கு கரங்களிலேந்திய
திருமாலை சாரதியைக் காண மனம் விழைந்தேன்
அனுபல்லவி
பெருமைக்குரிய திருவல்லிக்கேணியெனும்
திருத்தலத்தில் நின்றருளும் கண்ணனைக் கேசவனை
சரணம்
இருவிழியிரண்டிலும் கருமையணிந்தவளை
கருணை நிறைந்தவளைப் பேரழகுடையவளை
திருவென்னும் பெயராளை கமலமலரமர்பவளை
திருமகளைத் திருமார்பிலணிந்திருப்பவனை
No comments:
Post a Comment