மும்மூர்த்திகளின்…..
பல்லவி
மும்மூர்த்திகளின் பதமலர் பணிந்தேன் — சங்கீத
அனுபல்வி
தம்முடைய மனங்களில் தோன்றிய இறைவடிவை
செம்மையாய் இசை வடிவில் பாடிப் பரவிய
சரணம்
அம்பிகையீசன் கேசவன் ரகுராமனென
அம்பலத்துறையும் கடவுளர் புகழ் பாடி
வெம்பவக்கடல் கடக்க சிறந்த ஒரு வழிகாட்டி
இம்மாநிலம் போற்றப் புகழுடன் வாழ்ந்த
No comments:
Post a Comment