மராலீனாம் யானாப்யஸன
கலநா மூல குரவே
தரித்ராணாம் த்ராண வ்யதிகர ஸுரோத்யான தரவே
தமஸ் காண்ட ப்ரௌடி ப்ரகடன திரஸ்கார படவே
ஜநோயம் காமாக்ஷ்யா: சரண நலிநாய ஸ்ப்ருஹயதே (3)
मरालीनां यानाभ्यसनकलनामूलगुरवे
दरिद्राणां त्राणव्यतिकरसुरोद्यानतरवे ।
तमस्काण्डप्रौढिप्रकटनतिरस्कारपटवे
जनोஉयं कामाक्ष्याश्चरणनलिनाय स्पृहयते ॥3॥
இவன் (கவி) காமாக்ஷியின் திருவடித்தாமரையை (அடைய) விரும்புகிறான். அந்தத் தாமரை அன்னப்பறவைகளுக்கு நடைப்பயிற்சி தருகிற முதல் குரு. எளியவர்களைக்காக்கிற பணியில் கற்பகமரம். அறியாமை எனும் இருட்டுக் குவியலின் ஆற்றல் மிக்க விரிவை மறையச் செய்வதில் திறம் மிக்கது.
அன்னையே காமாக்ஷி……
பல்லவி
அன்னையே காமாக்ஷி அனுதினம் பணிந்தேன்
என்னைக் காத்தருள வேண்டுமெனத் துதித்து
அனுபல்லவி
சென்னகேசவன் சோதரியே மாயே
பன்னகாபரணியே ஏகம்பன் நாயகியே
சரணம்
அன்னங்கள் நடை பயில ஆசானாய் விளங்குவதும்
இன்னமும் அறியாமை இருள் போக்கும் குருவாயும்
நன்னலமெளியோர்க்கருளும் கற்பக தருவாயும்
பன்முகமாய் பலன் தருமுன் பாதாரவிந்தங்களை
No comments:
Post a Comment