சுரும்பார் குழலியின்…..
பல்லவி
சுரும்பார்குழலியின் பதமலர் பணிந்தேன்
கரும்பு வில்லும் மலர்க்கணையுமேந்தும்
அனுபல்லவி
நெருப்பை நெற்றியில் வைத்திருக்குமீசனின்
ஒரு பாகத்தமர்ந்த கேசவன் சோதரியின்
சரணம்
இருவினைப் பயன் நீங்க வேண்டுமென வேண்டி
அருந்திய நஞ்சை அமுதாகச்செய்தவளின்
பருத்த தனங்களால் வருத்தமடைபவளின்
கருத்த கூந்தலின் அழகுடையாளின்
No comments:
Post a Comment