ஆராவமுதனே…..
பல்லவி
ஆராவமுதனே அரங்கனுனைக் கண்டபின்னே
வேறொன்றும் நான் காண விழையேன் கேசவனே
அனுபல்லவி
தீராவினை தீர்க்கும் திருவரங்கநாதனே
பேராயிரம் கொண்ட பெரிய பெருமாளே
சரணம்
காரார் குழலாள் திருவரங்க நாயகியை
மாறாத அன்புடனே திருமார்பில் தங்கும்
பாரோர் போற்றும் பரமபதநாதனே
நாராயணனே எனக்கருள் புரிவாயே
No comments:
Post a Comment