4.வஹந்தீ ஸைந்தூரீம் ஸரணிம வநம்ராமரபுரீ
புரந்த்த்ரீ ஸீமந்தே கவி கமல பாலார்க்க ஸுஷமா
த்ரயீ ஸீமந்தின்யா: ஸ்தந தட நிசோலாருணபடீ
விபாந்தி காமாக்ஷ்யா: பதநலின காந்திர்விஜயதே ||
वहंती सैंदूरीं सरणिमवनम्रामरपुऱी-
पुरंध्रीसीमंते कविकमलबालार्कसुषमा ।
त्रयीसीमंतिन्याः स्तनतटनिचोलारुणपटी
विभांती कामाक्ष्याः पदनलिनकांतिर्विजयते ॥4॥
தன்னை வணங்கி நிற்கிற தேவருலகப் பெண்களின் வகிட்டில் சிந்தூரப்பொட்டின் நிலையை ஏற்றதும், கவிகளாகிய தாமரைகளை மலரச் செய்கிற இளஞ்சூரிய ஒளியும், வேதங்களாகிய பெண்களின் மார்பகத்தை மறைக்கிற செவ்வாடையுமாக விளங்குகிற திருவடித் தாமரையின் அழகு மேன்மையுடன் வெல்கிறது. திருவடியின் ஒளி வணங்குகிற பெண்களின் வகிட்டில் பதிய சிந்தூரமிட்டது போலாகின்றது.
தினமுனையே…..
वहंती सैंदूरीं सरणिमवनम्रामरपुऱी-
पुरंध्रीसीमंते कविकमलबालार्कसुषमा ।त्रयीसीमंतिन्याः स्तनतटनिचोलारुणपटी
विभांती कामाक्ष्याः पदनलिनकांतिर्विजयते ॥4॥
தினமுனையே…..
பல்லவி
தினமுனையே துதித்தேன் தேவி காமாக்ஷியே
உனதருளளித்தே எனைக் காத்தருள்வாய்
அனுபல்லவி
அனந்தன் கேசவன் சோதரி கௌரி
கனகமலை மீதமர்ந்திருப்பவளே
சரணம்
உனதடி மலரொளி வணங்கும் அணங்குகளின்
இனிய நுதலிலழகு சிந்தூரமாகவும்
வனப்புள்ள மறைமகளிர் தனங்களை மறைக்கும்
சிவப்பு நிற மேலாடை போலவும் விளங்குது
No comments:
Post a Comment