அழகுப் பெட்டகமாய்…..
பல்லவி
அழகுப் பெட்டகமாய்த் திகழும் மகாலக்ஷ்மியின்
கழலடி பணிந்தேன் எனக்கருள வேண்டுமென
அனுபல்லவி
சுழல் சக்கரமேந்தும் அழகன் கேசவன்
நிழலாய் விலகாமல் அவன் மார்பிலமர்ந்து
சரணம்
பூவிலமர்க் கலைமகளும் தேவி மலைகளும்
தேவரும் மூவரும் சுகசனகாதியரும்
தேவேந்திரனும் நாரதமுனிவரும்
யாவரும் பணிந்தேத்தும் சமுத்திரகுமாரியின்
No comments:
Post a Comment